சென்னை: பிரசாந்த் கிஷோர் தயாரித்து கொடுக்கும் படங்கள், தமிழகத்தில் திரைக்கு வராது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்த மனு குறித்த புதிய அறிவிப்புக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் தெரிவித்து உள்ளார்.

‘ சென்னை கோபாலபுரம் இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக ஸ்டாலின், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் புதிய தேர்தல் பிரசாரத்தை  வரும் 29ஆம் தேதி முதல் புதிய கோணத்தில் பிரச்சாரம் நடத்த திட்டமிட்டுள்ளோம்,  மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதே எனது முதல் பணி என்று  கூறியதுடன்,  திமுக ஆட்சிக்கு வந்ததும் போர்க்கால அடிப்படையில் மக்கள் பிரச்னைகளுக்கு 100 நாளில் தீர்வு காணப்படும் என அறிவித்தார்.

இதற்கு பதில் தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், ஸ்டாலின் ஏற்கனவே அவரது தொகுதியான  “கொளத்தூர் தொகுதியில் வாங்கிய மனுக்களுக்கே இன்னும்  தீர்வு காணவில்லை. இப்போ,  தேர்தல் நெருங்கி விட்டதால் ஸ்டாலின் நாடகமாடுகிறார். ஸ்டாலினுக்கு சொந்த புத்தி கிடையாது என்று விமர்சித்தவர்,  யாரோ சொல்வதை கேட்டுவிட்டு மசாலா படம் போல தர பார்க்கிறார். திமுகவுக்கு பிரசாந்த் கிஷோர் தயாரித்து கொடுக்கும் படங்கள் திரைக்கு வராது என்றார்.

மேலும், திமுகவும், ஸ்டாலினும் யார் என்பதை மக்கள் அறிவார்கள். திமுக ஆட்சிக்கு வந்தால் யாரும் நிம்மதியாக தொழில் நடத்த முடியாது. பஜ்ஜி கடை, சுண்டல் கடை, பார்லர் என எல்லா கடைகளிலும் தொந்தரவு செய்வார்கள். யாரும் நிலம் வாங்க முடியாது.

அதிமுக ஆட்சியில் மக்கள் நிம்மதியாக உள்ளார்கள். மக்களுக்கு தேவையேநிம்மதி தானே. அதிமுகவின் பிரமாண்டமான அவதாரத்துக்கு முன்பு திமுகவின் திட்டம் எடுபடாது.

இவ்வாறு அவர் கூறினார்.