கொரோனா பெருந்தொற்று பல உயிர்களை பலி வாங்கியிருக்கிறது. குறிப்பாக முதல் அலையைக் காட்டிலும் இரண்டாம் அலை தீவிரம் அடைந்து அதிக தொற்றுகளையும், உயிர் சேதங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதில் நிறைய பிரபலங்களும் மறைந்திருக்கிறார்கள்.

இந்தியாவில் சார்ஸ் கோவிட் 2 வைரஸ் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பை யாரும் கற்பனைக் கூட செய்து பார்க்கவில்லை. சாமானியர்கள் முதல் திரைப்பிரபலங்கள் வரை நன்கு அறிமுகமான ஆயிரக்கணக்கானோர் கோவிட் வைரஸ் பாதிப்பால் உயிரை இழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் அதிகரித்துக் கொண்டே வந்ததை அடுத்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும் விழிப்புணர்வை மாநில அரசின் சுகாதாரத்துறை ஏற்படுத்தி வருகிறது,

இந்நிலையில் தைரியமாக தடுப்பூசி போட்டு கொள்வது போல் நடிகை சினேகா புகைப்படம் வெளியிட்ட நிலையில், அவர் ஊசி போட பயந்து நடுங்கிய வீடியோவை பிரசன்னா வெளியிட்டு வைரலாக்கியுள்ளார்.

https://www.instagram.com/p/CRdXmfCnK3i/