ஜகார்த்தா:
ந்தோனேசியாவின் சுலவேசியில் 6.3 எனும் ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்த நிலநடுக்கம் பூமியின் 145 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டுள்ளதாக ஐரோப்பிய நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்ந்திருக்கின்றனர்.

தற்போது சுலவேசியில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தில் உருவாகியுள்ள பாதிப்புகள் குறித்த தகவல்கள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளார்களா என்று மீட்பு படையினர் மோப்பநாய் உதவியுடன் தேடுதல் பணியில் களமிறங்கியுள்ளனர். அதேபோல இந்தோனேசியா கடற்கரை பகுதிகள் மற்றும் தீவுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்தோனேசியா தீவுகளில் எரிமலைகள் பல இருக்கின்றன. இந்த எரிமலைகள் நிலநடுக்கம் காரணமாக வெடிக்கவும் வாய்ப்பிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.