சென்னை: தபால் வாக்கு செலுத்துவோர் பட்டியலை திமுக கோரியது தொடர்பாகதிமுக முறையீட்டை சென்னைஉஉயர்நீதி மன்றம் நாளை விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் தபால் வாக்கு செலுத்துவோரின் பட்டியலை வழங்க கோரி திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தொடர்ந்த வழக்கில், தலைமை நீதிபதி அமர்வு, தொகுதி வாரியாக தபால் வாக்கு பதிவு செய்ய அனுமதிக்கப்பட்ட வாக்காளர்களின் பட்டியலை மார்ச் 29-ம் தேதி மாலை 6 மணிக்குள் அரசியல் கட்சிகளுக்கு சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் அதிகாரிகள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
ஆனால், தபால் வாக்கு செலுத்துவோரின் பட்டியல் கொடுக்கப்படாத நிலையில், இன்று முதல் தபால் வாக்குகளை பெற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஆர்.சண்முகசுந்தரம் மற்றும் விடுதலை ஆகியோர்தலைமை நீதிபதி அமர்வு முன் ஆஜராகி முறையிட்டனர். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், நாளை வழக்கை விசாரிப்பதாக ஒப்புதல் அளித்துள்ளனர்.