நெட்டிசன்:
நம்பிக்கை ராஜ் (Nambikai Raj) அவர்கள் எழுதிய முகநூல் பதிவு:

ஒரு இஸ்லாமிய நாடு. அந்த நாட்டின் மத கோட்பாட்டின்படி பன்றிக் கறி என்பது விலக்கப்பட்ட (ஹராம்) உணவு. அதை அவர்கள் சாப்பிடக்கூடாது என்பது அவர்களின் மத சட்டம். ஆனால் அதே நாட்டில் மாற்று மதத்தை பின்பற்றுபவர்கள் பன்றிக் கறியை சாப்பிட அவர்கள் தடை விதிப்பதில்லை.
பன்றிக் கறியை சாப்பிடுவோர் தாராளமாக சாப்பிடலாம்.
துபாயில் உள்ள பெரிய ஹைப்பர் மார்க்கெட்டுகளில் பன்றி இறைச்சி கிடைக்கும். இஸ்லாமியர் தவிர்த்த மாற்று மதத்தினர் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி வாங்கி செல்வர்.
Patrikai.com official YouTube Channel