கத்தோலிக்க மத தலைவர் போப் பிரான்சிஸ் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
நுரையீரல் தொற்று மற்றும் சுவாச கோளாறு காரணமாக கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போப் பிரான்சிஸுக்கு இரட்டை நிமோனியா தாக்குதல் இருப்பதாகக் கூறப்பட்டது.

சனிக்கிழமை முதல் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில் அவரது இரத்த பரிசோதனைகளில் ஆரம்பகால சிறுநீரக செயலிழப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பரிசோதனைகள், “லேசான, ஆரம்பகட்ட சிறுநீரக செயலிழப்பு” என்பதைக் காட்டின, ஆனால், அது கட்டுப்பாட்டில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அதேவேளையில், கத்தோலிக்க மத தலைவர்கள் “இறக்கும் தந்தையின் படுக்கை அருகே ஒன்றுகூடினர்” என்று நியூயார்க்கில், கார்டினல் திமோதி டோலன் ஒப்புக்கொண்டார்.
ஆனால், ரோமில் உள்ள சர்ச் தலைவர்கள் இதுகுறித்து பகிரங்கமாக எதையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.