ஷார்ஜா: ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டியில், பஞ்சாப் அணியின் நிகோலஸ் பூரான் செய்த ஒரு ஃபீல்டிங் தற்போது பெரிய பேசுபொருளாகி வருகிறது.
பவுண்டரி லைனுக்கு மேலே பறந்துவந்த ஒரு பந்தை, அப்படியே காற்றில் பறந்து தாவி, பிடித்து, பவுண்டரி லைனுக்குள் தான் விழுவதற்கு முன்பாக, பந்தை மைதானத்திற்குள் வீசினார் பூரான்.
தற்போது, கிரிக்கெட் வரலாற்றின் ஒரு மிகச்சிறந்த பீல்டிங் நடவடிக்கையாக இதை வர்ணிக்கின்றனர் பலர்.
குறிப்பாக, இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், “என் வாழ்க்கையில் நான் பார்த்ததிலேயே இதுவொரு சிறந்த பீல்டிங் நடவடிக்கை. இதை நம்பமுடியாத ஒன்று” என்றுள்ளார் அவர்.
டெண்டுல்கர் தவிர, வேறு பலரும் பூரானின் இந்த பீல்டிங் நடவடிக்கையைப் புகழ்ந்துள்ளனர்.
பஞ்சாப் அணியின் மற்றொரு வீரரான மயங்க் அகர்வாலும், இப்போட்டியில் ஒரு சிறப்பான பீல்டிங்கை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இவ்வளவு கஷ்டப்பட்டும்கூட, பெரிய ஸ்கோரை எடுத்தும்கூட, பஞ்சாப் அணி தோற்றுவிட்டதுதான் சோகம்.