பண மதிப்பு நீக்கம் காரணமாக, ஏழை மக்கள் பாதித்துள்ளதோடு, நாட்டின் பொருளாதாரத்தில் தற்காலிக தேக்க நிலை ஏற்பட்டுள்ளது என்று, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வருத்தம் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு பிறப்பை ஒட்டி, மாநில ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களுக்கு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருந்து அளித்தார். அப்போது பேசிய அவர், பேசியதாவது:
“பண மதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக, நாட்டின் பொருளாதாரத்தில் தற்காலிக தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. இது தவிர்க்க முடியாததாகும். உள்நாட்டைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. எனினும், கருப்புப் பணப்புழக்கத்தை ஒழிக்கும் இந்த முயற்சிக்கு நாம் பாராட்டு தெரிவிக்க வேண்டும்.
அதே நேரம், இந்த நடவடிகையால் நாடு முழுவதும் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பண மதிப்பு நீக்கத்தால் மக்களுக்கு ஏற்படும் இன்னல்களைப் போக்க போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ஏழை மக்களை பாதுகாக்க, சில கொள்கை சீர்திருத்தங்களை மத்திய அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். மத்திய அரசின் காலக்கெடு விதிப்பு மற்றும் தொலைநோக்குப் பார்வை போன்றவை எல்லாம் ஏழை மக்களின் துயர் துடைக்க வாய்ப்பில்லை. அந்த மக்களுக்காகு உடனடியாக உதவிக்கரம் நீட்டப்பட வேண்டும்” என்று குடியரசுத்தலவர் பிரணாப் முகர்ஜி பேசினார்.
.
Summary: India President Pranab Mukherjee raised concern over demonetisation and it may affect economy. Also said poor people affected much on this activity.