(அக்னி தீர்த்தம் – பைல்படம்)

ராமேஸ்வரம்:

எச்.ராஜாவின் பெரியார் சிலை உடைப்பு பதிவை தொடர்ந்து, சென்னையில் பல இடங்களில் பூணூல் அறுப்பு செயல்கள்  நடைபெற்றது.

சுமார 15 இடங்களில் பூணூல் அறுப்பு செயலில் ஈடுபட்ட திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த புரோகிதர்கள் இன்று தங்களது பணியை செய்யாமல்.  திராவிடர் கழகத்தினரை கண்டித்து ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தக்கடலில் இறங்கி  ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின் சர்ச்சைக்குரிய பதிவு காரணமாக கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் பதற்றமான சூழல் உருவானது. அதைத்தொடர்ந்து சென்னையில் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி பகுதியில் 15 பேர்களின் பூணூல்களை மர்ம நபர்கள் அறுத்தனர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் பூணூல் அறுப்பில் ஈடுபட்ட திராவிடர் கழகத்தினரை கண்டித்து இன்று வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்த புரோகிதர்கள்,  ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்தக்கடலில் இறங்கிஆர்ப்பாட்டம் செய்தனர்.

புரோகிதர்கள் வேலைநிறுத்தம் காரணமாக  ராமேஸ்வரத்திற்குதர்ப்பணம் கொடுக்க வந்த பொதுமக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.