மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜயின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்தள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் இந்த ‘தளபதி 65 ‘ படத்தில் பூஜா ஹெக்டே அல்லது ராஷ்மிகா மந்தனா நடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதில் விஜய்க்கு நாயகியாக நடிப்பதற்கு பூஜா ஹெக்டே மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தன. இருவருமே விஜய் படம் என்பதால், நடித்துவிட வேண்டும் என்று ஆர்வம் காட்டினார்கள்.

இறுதியாகப் படப்பிடிப்பு தேதிகள் அனைத்தும் முடிவானபோது, பூஜா ஹெக்டேவுக்கு அந்த தேதிகள் ப்ரீயாக இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து விஜய்க்கு நாயகியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தம் செய்யப்படவுள்ளார். விரைவில் இதன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவுடன் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளனர்.

விடிவி கணேஷ், யோகி பாபு, குக் வித் கோமாளி போட்டியாளர் புகழ் ஆகியோரும் இப்படத்தில் நடிக்க உள்ளனர். தளபதி 65 படத்திற்கு அனிருத் இசை அமைக்க உள்ளார். விஜயுடன் 3வது முறையாக அனிருத் பணியாற்ற உள்ளார். கேஜிஎப் படத்தில் பணியாற்றிய அன்பறிவு இரட்டையர்கள் ஸ்டன்ட் அமைக்க உள்ளனர்.

இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா ஒப்பந்தமாகியுள்ளார்.

தளபதி 65 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகின. தற்போது அதனை உறுதிப்படுத்தும் வகையில், படத்தின் இயக்குனர் நெல்சன், லொகேஷன் தேடுவதற்காக ரஷ்யா சென்றுள்ளார். அதோடு ரஷ்யாவில் எடுக்கப்பட்ட படங்களையும் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் நெல்சன். மார்ச் மாதம் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், தற்போது லொகேஷன் தேடுதலுக்காக ரஷ்யா சென்றுள்ளார் நெல்சன்.

 

 

[youtube-feed feed=1]