சென்னை: டோக்கன் பெற்றவர்கள், அவர்களுக்கு உரிய தேதிகளுக்குள், பொங்கல் பரிசு தொகுப்பு பெற முடியவில்லை என்றால், அவர்கள், , 16ம் தேதி முதல்  பெற்றுக்கொள்ளலாம் என  அமைச்சர் சக்கரபாணி தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் நடப்பாண்டு ரேசன் அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. அதன்படி, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு, ரூ.1,000 ரொக்கம் ஆகியவை வழங்கப்படுகிறது. இதற்கான டோக்கன் வழங்கும்பணி கடநத் 3ந்தேதி தொடங்கி 7ந்தேதி முடிவடைந்தது.

இதையடுத்து, இன்று பயனர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியைமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி,  டோக்கனில் குறிப்பிட்டபடி,   குறிப்பிட்ட தேதிகளில் பொங்கல் பரிசு பெற முடியாதவர்கள், வெளியூர் சென்றவர்கள் ஜனவரி 15 ஆம் நாள் பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு, ஜனவரி 16 ஆம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

[youtube-feed feed=1]