புதுச்சேரி:
பொங்கல் பரிசு வழங்க புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் வழங்கியுள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி அரசின் குடிமைப்பொருள் வழங்கல் துறை சார்பாக ஆண்டுதோறும் பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இலவச பொங்கல் பொருள்களுக்குப் பதிலாக அதற்குரிய பணத்தை பயனாளிகள் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்த ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.
இதுமட்டுமின்றி பொங்கல் பண்டிகையையொட்டி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 1.75 லட்சம் சிவப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பொருட்களுக்கு பதிலாக தலா 200 ரூபாயை வங்கி கணக்கில் வழங்கப் பட உள்ளது. இதற்காக, 3.49 கோடி ரூபாயை ஒதுக்கவும், ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel