புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ், பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அதில் பாஜக 9 இடங்களில் போட்டியிடுகிறது.

அதற்கான வேட்பாளர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதன் விவரம் வருமாறு:

லாஸ்பேட்டை – வி. சாமிநாதன்

மண்ணாடிப்பட்டு – ஏ. நமச்சிவாயம்

ஊசுடு – ஜே. சரவண குமார்

காமராஜ் நகர் – ஏ. ஜான்குமார்

காலாப்பட்டு – பி.எம்.எல். கல்யாணசுந்தரம்

நெல்லித்தோப்பு – விவிலியன் ரிச்சர்ட்ஸ் ஜான்குமார்

மணவெளி – ஆர். செல்வம்

திருநள்ளாறு – ஜி.என்.எஸ். ராஜசேகரன்

நிரவி – வி.எம்.சி.எஸ். மனோகரன்