டில்லி:

தீபாவளி பண்டிகையையொட்டி, டில்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ள  நிலையில், இந்தஆண்டு காற்றுமாசு குறைவாக  இருந்ததாக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார்.

கடந்த 5 வருடங்களில் இல்லாத அளவுக்கு  இந்த வருடம் டெல்லியில் தீபாவளி சமயத்தில் காற்று மாசு குறைந்திருப்பதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

தீபாவளி தினமான கடந்த 27ம் தேதி அன்று டெல்லியில் உள்ள 24 இடங்களில் காற்று மாசு அளவுகளை அரசாங்கம் கணக்கிட்டதாகவும், அதன் முடிவுகளின் படி கடந்த 5 வருடங்களில் இல்லாத அளவுக்கு, இந்த வருடம் காற்று மாசு குறைந்திருப்பதாகவும் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

காற்று மாசினை கட்டுப்படுத்த டெல்லி மக்கள் தொடர்ந்து தங்களால் முடிந்த பணிகளை மேற்கொள்ள வேண்டு மென்றும் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.

காசியாபாத், நொய்டா மற்றும் குருகிராம் போன்ற அருகிலுள்ள இடங்களில் பட்டாசுகள் பயன்படுத்தப்பட்டன. மாசுபாட்டைக் குறைக்க மிகவும் கடினமாக உழைத்ததாக கூறியவர்,  கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த முறை மிகக் குறைவு. கடந்த ஐந்து ஆண்டுகளில் கிராக்கர் வெடிப்பதும் மிகக் குறைவு, ”என்றார்.

இதற்கிடையில், டில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி, தலைநகரில் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதில் ஆம் ஆத்மி அரசாங்கம் “முற்றிலும் தோல்வியுற்றது” என்று குற்றம் சாட்டினார்.

“இன்று, மாசுபாட்டின் அளவு 750 புள்ளிகளைத் தாண்டியுள்ளது, இது டெல்லிக்கு மிகவும் ஆபத்தான சூழ்நிலை … இரண்டு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் … மூன்று மாநகராட்சிகளின் மேயர்கள் மாசுபாட்டைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர், இயந்திரங்கள் மூலம் தண்ணீரைத் தெளிப்பது மற்றும் தூசி அதிகரிக்கும் இடங்களில் தூய்மையை உறுதி செய்வது உட்பட, ”என்று கூறினார்.