டில்லி:

டில்லியில் இன்றுமுதல் பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் நடைமுறைப்படுத்தப்படும் நிலையில், பெண்களின் பாதுகாப்புக்காக 13 ஆயிரம் மார்ஷல்களை நிறுத்த டில்லி மாநில அரசு முடிவு செய்துள்ளது.

ஆகஸ்டு மாதம் 15ந்தேதி சுதந்திர தின விழாவில் பேசிய டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அக்டோபர் 29 ஆம் தேதி முதல் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

ரக்சாபந்தன் பண்டிகையொட்டி சகோதரிகளுக்கு தரும் பரிசு இது என்று கூறியவர், டெல்லி போக்குவரத்து கழக பேருந்துகளிலும், கிளஸ்டர் (Cluster) வகை பேருந்துகளிலும் பெண்களுக்கு கட்டணம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தலைநகர டில்லியில்  இன்றுமுதல் பெண்களுக்கு இலவச பஸ் பயணம் தொடங்கி உள்ளது. அத்துடன்,  அரசு பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக 13,000 மார்ஷல்கள் நியமிக்கப்பட்டு உள்ளார்கள்.

டில்லி தியாகராஜ் ஸ்டேடியத்தில்  புதிதாக பணியமர்த்தப்பட்ட   பஸ் மார்ஷல்களின் கூட்டத்தில்  பேசிய கெஜ்ரிவால்,  டெல்லி டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் (டி.டி.சி) இயக்கப்படும் பேருந்துகளில் மார்ஷல்களின் எண்ணிக்கை மேலும் 10,000 அதிகரித்து உள்ளதாக  கூறினார்.

“ஒவ்வொரு அரசாங்க பேருந்திலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அவர்கள் மீது நம்பிக்கையை உருவாக்குவதற்கும் ஒரு பொறுப்பை இன்று உங்கள் அனைவருக்கும் நான் ஒப்படைக்கிறேன், இதனால் அவர்கள்  பேருந்துகளில் பயணிக்கும்போது, தங்களின் வீட்டில் உள்ளது போன்ற பாதுகாப்பை  உணர்கிறார்கள்,” என்று அவர் கூறினார்.  தற்போது 10ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த மார்சல்களின் எண்ணிக்கை 13ஆயிரமாக உயரும் என்றும்,  டெல்லியில் பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். , இது உலகின் எந்த நகரத்திலும் இதுபோல செய்யப்படவில்லை என்றும் கூறினார்.

டெல்லியின் இரண்டு கோடி மக்களும் எனது  நெருங்கிய குடும்பத்தைப் போன்றவர்கள் என்று கூறியவர், முதலமைச்சரான நான் அவர்களின் குடும்பத்தின் மூத்த மகனைப் போன்றவன் என்றும் கூறினார்.

தற்போது தலைநகரில் பொது பேருந்துகளில் நிறுத்தப்பட்டுள்ள 3,400 பஸ் மார்ஷல்கள் தங்கள் கடமைகளை “முழு பொறுப்புடனும் சிறப்புடனும்” பணியாற்றி வந்தனர்.  இதன் காரணமாக டெல்லி மக்கள் அரசாங்கத்தை ஆதரித்தனர் என்று கூறியவர், பேருந்துகளின் அனைத்து ஷிப்டுகளிலும் அனைத்து பேருந்துகளிலும் மார்ஷல்களைக் நியமிக்க கோரினர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்பது “இந்த குடும்பத்தின் மூத்த மகன் என்ற முறையில், எல்லா பெண்களுக்கும் பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பான சூழலை உறுதி செய்வது எனது கடமையாகும். பேருந்துகளில் பயணிக்கும் எனது தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்கள் அனைவரும் பாதுகாப்பாகவும் பாதுகாப்பாகவும் உணரப்படு வதையும், பேருந்துகளில் அவர்கள் வீட்டில் உணரும் பாதுகாப்பை உணர வேண்டியது உங்கள் [மார்ஷல்களின்] பொறுப்பு, ”என்று அவர் கூறினார்,   அதிகாரிகள் “நேர்மையுடனும் உறுதியுடனும் தங்கள் கடமையைச் செய்வார்கள் என்று நம்புவதாக தெரிவித்தவர்,  “பெண்களின் பாதுகாப்பு எங்களுக்கு மிகவும் முக்கியமானது, பெண்கள் எல்லா நேரங்களிலும் பாதுகாப்பாக உணர வேண்டும்.

நாங்கள் ஒரு குடும்பம் என்பதால், ஒருவருக்கொருவர் பாதுகாப்பான இடத்தை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.