சென்னை:
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் டுவிட்டர் பக்கத்தில் இன்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘‘மேலும் ஒரு அரசுத்துறை செயலற்று இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. காவிரிப் படுகையில் மாசுக் கட்டுப்பாடு வாரிய செயல்கள் அதிர்ச்சி அளிக்கிறது .
தமிழக மக்களின் நம்பிக்கைக்குத் துரோகம் இழைக்கப்படுகிறது. மாசுக்கட்டுப்பாடு வாரியமே விழித்தெழு’’ என்று தெரிவித்துள்ளார்.