விழுப்புரம்: அரசியல் என்பது பாம்பு அதை கையில் எடுத்து விளையாட வந்திருக்கேன், அரசியலைக்கண்டு தனக்கு பயமில்லை என்று கூறிய விஜய்,   மாநாட்டில், திமுக, அதிமுக, பாஜக என அனைத்து கட்சிகளையும் கடுமையாக சாடினார். அதுபோல திராவிடமும்,தேசியமும் தனது இரு கண்கள் என்று கூறினார். அதுபோல மாநாட்டில் வைக்கப்பட்டுள்ள தலைவர்கள் கட்அவுட்கள் குறித்தும் பேசினார்.

விழுப்புரம் வி.சாலையில் இன்று நடைபெற்ற தவெக முதல் மாநாட்டில்  கட்சி தலைவரான நடிகர் விஜய்,  19 தீர்மானங்களை நிறைவேற்றியதுடன்,  கட்சியின் கொள்கை மற்றும் கொள்கை பாடலையும் வெளியிட்டார். தொடர்ந்து மேடையில் உரையாற்றிய விஜய், மாநில மற்றும் தேசிய கட்சிகளை கடுமையாக சாடினார்.  தமிழக அரசியல்கள் கட்சிகள் மட்டுமின்றி மத்திய பாஜக அரசையும் கடுமையாக சாடியதுடன், விகிதாச்சார இடஒதுக்கீடு, நீட் , கவர்னர் பதவி உள்பட பல்வேறு தகவல்கள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய  விஜய்,   ஒரு குழந்தை முன்பாக பாம்பை கண்டாலும் அந்தப் பாம்பை சிரித்தபடியே கையில் எடுத்து விளையாடும் அந்த குழந்தை. அதே போலத்தான் அரசியல் என்பது பாம்பு அந்த பாம்பை பயமே இல்லாமல் கையில் எடுத்து விளையாட வந்திருக்கிறேன். பாம்பு தான் அரசியல். அத கையில பிடிச்சு விளையாட போறது தான் உங்க விஜய். “

அரசியலில் வந்துவிட்டோம்.. சீரியாஸாக பேச வேண்டும்.. அப்படியே பேசிக்கொண்டே பார்மெட்டை மறந்துட்டேன்.. இப்போ சொல்லுறேன்.. என் ஆனந்த் அவர்களே.. கட்சியின் மாவட்ட செயலாளர்கள் அவர்களே.. என்னங்க இது அவர்களே இவர்களே எல்லாம்.. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கொள்கையை அறிவித்து விட்டு எல்லாரையும் ஏன் பிரிச்சு பார்க்கனும்.. நான் அப்படி எல்லாம் பேச மாட்டேன்.

அரசியலில் வளவளவென்று பேச கூடாது. புள்ளி விவர புலியாக புள்ளி விவரங்களை அடுக்கி உள்ளோம். இங்க நீ வேற நான் வேற இல்ல, இது இந்தியா…ஏற்கனவே இருக்க அரசியல்வாதிகள் மாறி அதிகமா பேசி டைம் வேஸ்ட் பண்ணப் போறதில்லை அரசியல்வாதிகளை பற்றியும் அதிகமாக பேச போறது இல்லை.

இங்க ஆல்ரெடி இருக்கிற அரசியல்வாதிய பத்தி பேசி டைம் வேஸ்ட் பண்ண போறதும் இல்லை.. அதுக்காக கண்ண மூடிட்டு இருக்கவும் மாட்டோம். அறிவியல் மாறிடுச்சு.. உலகம் மாறிடுச்சு.. அரசியல் மட்டும் மாறாமல் இருந்தால் என்ன? அரசியலையும் .மாற்றுவோம். காலத்திற்கு ஏற்றபடி அரசியலில் மாற்றங்களை செய்வோம், என்று விஜய் பேசி உள்ளார், என்று குறிப்பிட்டு உள்ளார்.

அரசியலை கண்டு எனக்கு பயமில்லை என்றும் முதன்முதலில் அம்மா என்று அழைக்கும் குழந்தை முன்பு பாம்பு வந்து நின்றால் எப்படி இருக்குமோ அதுதான் அரசியல் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உரையாற்றியுள்ளார்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். இங்க யாரும், மேலே கீழ என்ற எந்த பாகுபாடும் இல்லை

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். இங்க யாரும், மேலே கீழ என்ற எந்த பாகுபாடும் பார்க்கப் போவதில்லை. நாம் எல்லோரும் ஒன்றுதான் எல்லோரும் சமம்தான். அறிவியலும், தொழில்நுட்பமும் மட்டும்தான் மாறணுமா, அரசியல் மாறக்கூடாதா. இங்கு எப்போதும் மாறாதது மனித பிறப்பு பசி வேலை உழைப்பு பணம் என சில மட்டும்தான்”

“பெரியார் எங்கள் கொள்கை தலைவர். பெரியார் சொன்ன கடவுள் மறுப்பு கொள்கையை மட்டும் நாங்கள் கையில் எடுக்க போவதில்லை. எங்களுக்கு அதில் உடன்பாடும் இல்லை. யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் நாங்கள் எதிரானவர்கள் இல்லை.

அண்ணா கூறியபடி, ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. ஆனாலும் பெண் கல்வி பெண்கள் முன்னேற்றம் சமூக சீர்திருத்தம் சமூக நீதி பகுத்தறிவு சிந்தனை, பெரியார் சொன்ன இவை அனைத்தையும் நாங்கள் முன்னெடுக்க போகிறோம்.”

அரசியல் நமக்கு ஒத்துவருமா என்று பூதக்கண்ணாடி வைத்து யோசித்தால் சரிவராது. வெறுப்பு அரசியலை எப்போதும் கையில் எடுக்க மாட்டோம். வாழவைத்த மக்களுக்காக நன்மை செய்யவே அரசியலுக்கு வந்துள்ளேன். சினிமாவில் நடிக்கலாம் பணம் சம்பாதிக்கலாம் என்றுதான் முதலில் நினைத்தேன். சினிமாவில் சம்பாதித்து விட்டுச் செல்லாமல் என்னை வாழ வைத்த மக்களுக்கு நல்லது செய்யவே தற்போது வந்திருக்கிறேன்”

கட்அவுட் தலைவர்கள் குறித்து பேச்சு

பெரியாருக்கு அப்புறம் எங்களின் கொள்கை தலைவர் பச்சை தமிழர் பெருந்தலைவர் காமராஜர். காமராஜர் இந்த மண்ணில் மதச்சார்பின்மைக்கும் நேர்மையான நிர்வாகத்துக்கும் செயல்பாட்டுக்கும் முன் உதாரணமாக இருப்பதால், அவரை எங்கள் வழிகாட்டியாக ஏற்கிறோம்.

இந்தியத் துணைக் கண்டத்தின் அரசியல் சாசனத்தை உருவாக்கிக் காட்டியவர் அண்ணல் அம்பேத்கர். இந்தப் பெயரைக் கேட்டாலே சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துகிற அவர்கள் எல்லோரும் நடுங்கிப் போய் விடுவார்கள். வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தையும் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகவும் போராடிய அவரை எங்கள் வழிகாட்டி என்று சொல்வதில் பெருமை கொள்கிறோம்.

பெண்களைக் கொள்கை தலைவர்களாக ஏற்றுக் களத்தில் வரும் முதல் அரசியல் கட்சி தமிழக வெற்றிக் கழகம்தான். அதில் ஒருவர் வீராங்கனை… இந்த மண்ணை கட்டிக்காத்த அந்தப் பேரரசி வேலுநாச்சியார். சொந்த வாழ்க்கையின் சோகத்தைக்கூட மறந்து விட்டு இந்த மண்ணுக்காக வாளையும் வேலையும் ஏந்தி போர்க்களம் புகுந்த ஆணை காட்டிலும் வீரமான வேகமான வேறு புரட்சியாளர்தான் நம் வேலுநாச்சியார்.

இன்னொருவர், இந்த மண் பின்தங்கி விடக் கூடாது என்று அதன் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்ட அஞ்சலையம்மாள். சொத்தை இழந்தாலும் சுயநலம் பார்க்காமல் இந்த மண்ணுக்காக இந்தியச் சுதந்திரப் போராட்ட களத்தில் இறங்கிப் போராடிய புரட்சி பெண்மணி தான் நம் அஞ்சலையம்மாள்.

இவர்கள்தான் நம் கொள்கைத் தலைவர்கள். இவர்களை நாம் பின்பற்றுவதே நம் மதச்சார்பின்மைக்கும் சமூக நல்லிணக்கத்துக்குமான மிகப்பெரிய சான்றாக இருக்கும் என்றார்.

 திராவிடமும் தமிழ் தேசியமும் இந்த மண்ணின் இரண்டு கண்கள்

திராவிட முதல் என்று சொல்லிக்கொண்டு தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணாவின் பெயரை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டை சுரண்டி கொள்ளை அடிக்கும் குடும்ப சுயநல கூட்டம் தான் நம்முடைய அரசியல் எதிரி. கொள்கை கோட்பாட்டளவில் திராவிடத்தையும் தமிழ்த் தேசியத்தையும் நாம் பிரித்துப் பார்க்கப் போவதில்லை. திராவிடமும் தமிழ் தேசியமும் இந்த மண்ணின் இரண்டு கண்கள்.” என்றார்.

கூத்தாடி

அதுபோல, தன்னை கூத்தாடி என சிலர் விமர்சிக்கிறார்கள் என்று கூறியவர், கூத்தாடி என்றால் யார் என்பது குறித்து விளக்கம் அளித்தார். சினிமா என்றால் வெறும் பாட்டு, டான்ஸ் மட்டும்தானா என்றவர்,   `கூத்து இந்த மண்ணோடும் மக்களோடும் கலந்த ஒன்று. இந்த கூத்தாடி என்கிற பெயர் நமக்கு மட்டும் வந்ததில்லை. அன்று தமிழ்நாட்டில் நம்ம ஊர் வாத்தியார் எம்.ஜி.ஆர், ஆந்திராவில் வாத்தியார் என்.டி.ஆர் கட்சி ஆரம்பித்தபோது `கூத்தாடி… கூத்தாடி’ என்றுதான் கூப்பாடு போட்டார்கள். அவர்களே அப்படி கூப்பிடும்போது நம்மை எப்படி கூப்பிடாமல் இருப்பார்கள். ஆனால் அந்த ரெண்டு கூத்தாடிகள்தான், இரண்டு மாநிலங்களின் ஆகப்பெரும் தலைவர்களாக இன்றும் மக்கள் மனதில் நீங்கா புகழோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சினிமா வெறும் பாட்டு டான்ஸ் காமெடி என்டர்டெய்ன்மென்ட் மட்டும் தானா… தமிழரின் வாழ்வியல், கலை, இலக்கியம், பண்பாடுதான் சினிமா. என்டர்டெயின்மென்ட் காரணத்தையும் தாண்டி சமூக அரசியல் புரட்சிக்கு உதவிய ஒரு பவர்ஃபுல் கருவிதான் சினிமா. திராவிட இயக்கம் பட்டித்தொட்டியெல்லாம் வளர்ந்ததே சினிமாவை வைத்துதான்”  என்றார்.

மக்கள் விரோத `திராவிட மாடல் ஆட்சி

“மக்கள் விரோத  `திராவிட மாடல் ஆட்சி’ எனக் கூறி…” – திமுக-வையும் கடுமையாக சாடினார்,. இங்கே ஒரு கூட்டம் கொஞ்ச காலமாக ஒரே பாட்டைப் பாடிக்கொண்டு, யார் அரசியலுக்கு வந்தாலும் ஒரு குறிப்பிட்ட கலரை அவர்கள் மீது பூசிவிட்டு, மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், இவர்கள் மட்டும் அண்டர் கிரவுண்டில் டீலிங் போட்டுக் கொண்டு, தேர்தல் நேரத்தில் மட்டும் அறிக்கை வெளியிட்டு சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு எப்போதும் இந்த பாசிசம்… பாசிசம்… பாசிசம் அவ்வளவுதான். ஒற்றுமையாக இருக்கின்ற நம் மக்கள் மத்தியில் சிறுபான்மை, பெரும்பான்மை என்று பிரிவினை பயத்தைக் காட்டி ஃபுல் டைம் சீன் போடுவது வேலையாகிவிட்டது. அவர்கள் பாசிசம் என்றால் நீங்கள் என்ன பாயசமா… அவர்களுக்கு நீங்களும் கொஞ்சமும் சளைக்காதவர்கள்தான். மக்கள் விரோத ஆட்சியை `திராவிட மாடல் ஆட்சி’ என்று கூறி ஏமாற்றுகிறீர்கள். அதனால், இனிமேல் உங்களை எதிர்க்கிறவர்களுக்கு என்னதான் நீங்கள் கலர் பூசும் மோடி மஸ்தான் வேலையை செய்தாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை” என்று நேரடியாகவே திமுக-வை சாடினார்.

நம் கூடவே இருந்து நம்மை ஆள்கிறார்கள்

`கருத்தியல் , கொள்கை என பேசி அரசியல் கட்சியினர் நாடகம் ஆடுவதாக விமர்சித்தவர்,    நம் கூடவே இருந்து நம்மை ஆள்கிறார்கள் ஊழல் கபடதாரிகள் என ஆட்சியாளர்களை கடுமையாக சாடினர்,.  `பிளவுவாத சித்தாந்த அரசியல் மட்டும் எங்கள் எதிரி அல்ல. இவர்களை எளிதாகக் கண்டுபிடித்து விடலாம். ஆனால், இந்த ஊழல் இருக்கிறதே, அது எங்க ஒளிந்திருக்கிறது என்று கண்டுபிடிக்கவே முடியாது.

கருத்தியல் பேசிக் கொள்கை நாடகமும் போடும், கலாசார பாதுகாப்பு வேஷமும் போடும். அதற்கு முகமூடிதான் முகமே. இப்படி முகமூடி போட்ட ஊழல் கபடதாரிகள்தான் இப்போதுதான் கூடவே இருந்து கொண்டு நம்மை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். நம்முடைய ஒரு எதிரி இந்த பிளவுவாத சக்திகள். இன்னொரு எதிரி ஊழல் கபடதாரிகள். இங்கு யார் வரவேண்டும், வரக்கூடாது என்று தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

மகத்தான அரசியல் என்றால் அது மக்களுக்கான அரசியல் தான். அதுதான் என் பாதை 

இங்கு சாதிகள் சமூக நீதிக்கான அளவுகளாக மட்டும்தான் இருக்கும். அதை வைத்து நம்ம மண்ணை வேறு மாதிரி மாற்ற வேண்டும் என்று எவ்வளவு முயற்சித்தாலும் அதை நம் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

மகத்தான அரசியல் என்றால் அது மக்களுக்கான அரசியல் தான். அவர்களில் ஒருத்தனாக, அவர்களுக்காக ஒருத்தனாக எப்போதும் மாறாத மனதோடு மனதோடு களத்தில் நிற்பதுதான் எங்களின் நிரந்தர அரசியல் பாதை” .

இவ்வாறு பேசினார்.