சென்னை:
பெரியார், ரஜினி விவகாரம் குறித்து பேசுவதை விட, 5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து விவாதியுங்கள் என தமிழக அரசியல் கட்சிகளுக்கு லட்சிய திமுக நிறுவனர் டி.ராஜேந்தர் அட்வைஸ் செய்துள்ளார்.
மத்தியஅரசின் மக்கள் விரோத செயலுக்கு தலையாட்டி பொம்மையாக செயல்பட்டு வரும் தமிழக அரசு, மத்திய அரசு அறிவுறுத்தலின்படி, 5 மற்றும் 8-ம் வகுப்புக்கு நடப்பாண்டு முதலே பொதுத் தேர்வு நடைபெறும் என அறிவித்து உள்ளது.
ஆரம்பத்தில் 3 வருடம் கழித்தே பொதுத்தேர்வு என்று கூறிய கல்வி அமைச்சர் செங்கோட்டையன், பின்ன நடப்பாண்டே பொதுத்தேர்வு நடைபெறும் என்றம், தேர்வுகள் படிக்கும் பள்ளிகளை தவிர்த்து வேறொரு பள்ளியில் நடைபெறும் என்று என்று கூறி பல்டியடித்தார்.
அமைச்சரின் அறிவிப்புக்கு கல்வியாளர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகரும், லட்சிய திமுக நிறுவனருமான டி.ராஜேந்திரன், நாட்டின் எத்தனையோ பிரச்சினைகள் உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் பெரியார் குறித்தும், ரஜினி குறித்தும் விவாதித்துக் கொண்டிருக்கின்றனர் என கடுமையாக சாடினார்.
தற்போதைய நிலையில், பள்ளி மாணவ மாணவர்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்றவர், நடப்பாண்டு முதல் 5 மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது குறித்து விவாதியுங்கள் என்று ஆலோனை கூறினார்.