சத்தர்பூர்:
கொலை வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்க, சாமியாரிடம் குறி கேட்ட போலீஸ்காரர் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.

மத்திய பிரதேசத்தில் உள்ள ஓடபூர்வா கிராமத்தில், 17 வயது சிறுமி கொலை வழக்கில், ஆதாரங்கள் கிடைக்காமல் போலீசார் தவித்து வந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய எஸ்.ஐ., அனில் ஷர்மா, கொலையாளி குறித்து உள்ளூர் சாமியார் ஒருவரிடம் குறி கேட்டுள்ளார். இது குறித்த, ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பானது.
இதையடுத்து, அனில் ஷர்மா மற்றும் காவல் நிலைய பொறுப்பாளர் பங்கஜ் சர்மா இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
Patrikai.com official YouTube Channel