சென்னை: மதுரை உசிலம்பட்டியில் டாஸ்மாக்கில் ஏற்பட்ட தகராறில் காவலர் கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து, சட்டப்பேரவையில் பேச முயற்சித்த எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்ல்ஏக்கள் அவையில் இருந்து சபாநாயகரால் வெளியேற்றப்பட்டனர்.
இந்தநிலையில், உசிலம்பட்டி காவலர் கொலை:, மக்கள் பிரச்சினை குறித்து பேச சபாநாயகர் அனுமதி மறுப்பதாக, சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.
மதுரை உசிலம்பட்டி காவலர் கொலை தொடர்பாக அதிமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு விவாதத்துக்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்ததால் பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் முழக்கம், அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்களை சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். பின்னர் அதிமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த நிலையல், அவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, உசிலம்பட்டி காவலர் கொலை தொடர்பாக பேச சட்டப்பேரவை யில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காவலரையே கொலை செய்யும் அளவிற்கு போதைப்பொருள் வியாபாரிகள் தைரியம் பெற்றுள்ளனர். போதைப் பொருளை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது. காவல்துறை, காவலர்களையாவது காப்பாற்ற வேண்டும். தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இன்றைய தினம் திட்டமிட்டு எங்களை வெளியேற்றி உள்ளனர். மக்களை பற்றி அரசுக்கு கவலை இல்லை. எவ்வளவு முக்கிய பிரச்சினையாக இருந்தாலும் துணை முதல்வரின் பதிலுரை தடை பட கூடாது என நினைக்கின்றனர் என கூறினார்.