செகந்திராபாத்

செகந்திராபாத் கோவில் சிலை உடைக்கப்படதால் முனனுமதியின்றி சாலையில் பூஜை செய்த பக்தர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

செகந்தராபாத் நகரின் கும்மரிகுடா பகுதியில் உள்ள இந்து கோவிலான முத்தியாலம்மா கோவில் கருவறையில் உள்ள துர்கை சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த திங்கட்கிழமை சிலையை உடைத்த நபரை அப்பகுதி மக்கள் பிடித்து அடித்து உதைத்து காவல் துறையிடம் ஒப்படைத்து  அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவில் தாக்கப்பட்ட சம்பவம் கும்மரிகுடாவில் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதற்கு  இந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அங்கு அசம்பாவித சம்பங்களை தவிர்ப்பதற்காக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என ஏராளமான பக்தர்கள் கோவில் முன் உள்ள சாலையில் பூஜை மற்றும் பிற சடங்குகளை நடத்த ஏற்பாடு செய்தனர். பூஜைக்காக கூடாரங்கள் அமைத்து, தரைவிரிப்புகளையும் விரித்து, அதில் அமர்ந்து பூஜைகளை செய்தனர்.

பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையிஅர் அவர்களை தடுத்து. இவ்வாறு பூஜை செய்வதற்கு முன் அனுமதி பெறவில்லை என்பதால் கலைந்துசெல்லுங்கள் என அறிவுறுத்தினர். மேலும் பாதைகளை அடைத்து மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவது தவறு என்றும் கூறினர்.

ஆயினும் பூஜை நடத்துவதில் மக்கள் உறுதியாக இருந்தததல் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கூடாரங்களை அகற்றி, கூட்டத்தை கலைத்தனர். காவல்துறையினரின் இந்த அங்கு சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டு பிறகு அமைதி ஏற்பட்டுள்ளது.