சென்னை: தள்ளுவண்டி மூலம் காய்கறிகள் மற்றும் பழ வியாபாரம் செய்பவர்களை காவல்துறையினர் தடுக்கக்கூடாது என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவித்து உள்ளார்.
‘கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், நகரப்பகுதிகள் மட்டுமல்லாமல் கிராம பகுதிகளுக்கும் சம அளவில் காய்கறிகள் , பழங்கள் விற்பனை அரசு சார்பில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, மூன்று சக்கர வாகனம்/தள்ளுவண்டி மூலம் காய்கறிகள் மற்றும் பழ வியாபாரம் நடைபெற்று வருகிறது. சில இடங்களில் வியாபாரிகளை காவல்துறையினர் தடுப்பதாக புகார்கள் எழுந்துள்ளது.
இதையடுத்து, மூன்று சக்கர வாகனம்/தள்ளுவண்டி மூலம் காய்கறிகள் மற்றும் பழ வியாபாரம் செய்பவர்களை போலீசார் தடுத்து நிறுத்தக்கூடாது என்று அறிவித்துள்ள சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மீறி தடுத்து நிறுத்தினால் பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு 044-45680200 என்ற தொலைபேசி மற்றும் 9499932899 என்ற கைப்பேசி எண் மூலம் தகவல் தெரிவிக்கலாம் என கூறியுள்ளார்.,