சென்னை:

ராளமான ரவுடிகளுடன் பிறந்தநாள் பார்ட்டி கொண்டாடிய ரவுடி பினு தலைமறைவானதை அடுத்து அவரை சுட்டுப்பிடிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது.

சென்னை பூந்தமல்லி அருகே உள்ள மலையாம்பாக்கத்தில் ரவுடி பினு தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதில் ஏராளமான ரவுடிகள் கலந்துகொண்டனர்.

இத்தகவலை அறிந்த காவல்துறையினர் ரவுடிகளை சுற்றி வளைத்தனர். இவர்களில் பலரை கைது செய்தனர். ஆனால் ரவுடி பினு தப்பியோடி தலைமறைவாகிவிட்டார். அவரைப் பிடிக்க காவல்துறை தனிப்படை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பினு, கேரளாவில் உள்ள தனது சொந்த ஊரில் பதுங்கியிருக்கலாம் என்ற தகவல் காவல்துறைக்குக் கிடைத்துள்ளது.

இதையடுத்து கேரளா செல்லும் தனிப்படை, தேவைப்பட்டால் பினுவை சுட்டுப்பிடிக்கவும் திட்டமிட்டுள்ளது.