கொல்கத்தா: பெண் முதல்வர் மம்தா பானர்ஜி ஆட்சி செய்துவரும் மேற்குவங்கத்தில் பெண் பயிற்சி மருத்துவர் கும்பலால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
கொலை செய்யப்பட்ட மகளின் உடலை கொடுத்தவுடன், அதை உடனே எரிக்க வலியுறுத்தியதுடன், தங்களது மகள் சடலம் முன்பு போலீசார் பணம் கொடுத்தனர், அதை நாங்கள் வாங்க மறுத்துவிட்டோம் உயிரிழந்த மருத்துவ மாணவியின் பெற்றோர் குற்றம் சாட்டி உள்ளார்.
கொல்கத்தா காவல் துறையினர் கொலை செய்யப்பட்ட மருத்துவரின் பெற்றோரிடம் பேரம் பேசியது பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் உடலை, அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைத்த காவல்துறையினர், அவரதுவீட்டின் மகளின் சடலத்தின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அழுது கொண்டிருக்கும்போது காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்த மருத்துவரின பெற்றோரிடம் பணம் கொடுப்பதாக பேரம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 31 வயதான பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டு, கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்தும், நீதி கேட்டும் மருத்துவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த கொடூர பாலியல் கொலையை ஓரு கும்பலே செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், மம்தா அரசு ஒரே சஞ்சய் ராய் என்ற ஒருவரை மட்டுமே கைது செய்து விட்டு, முக்கிய தடயங்களை அழத்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்த படுகொலை சம்பவத்தை சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த பாலியல் கொலையை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் பொதுமக்களின் மருத்துவ சிகிச்சையில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் மருத்துவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இருந்தாலும் மேற்குவங்க மாநிலத்தில் மருத்துவர்கள் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
நேற்று இரவு ( 04-09-24) கொல்கத்தாவில் நடைபெற்ற மருத்துவ சங்கத்தினரின் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது, முக்கிய சாலைகளில் விளக்குகளை அனைத்து போராட்டம் நடத்தப்பட்டது. பலர் கைகளில் மெழுகுவர்த்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலத்தின் பல்வேறு முக்கிய சாலைகளில் பேரணியும் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில், ஆர்.ஜி. கர் மருத்துவமனை மருத்துவர்கள், கொலை செய்யப்பட்ட பயிற்சி மருத்துவரின் பெற்றோர்கள், உறவினர்களும் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தில் பாலியல் கொலை செய்யப்பட்ட இளம்பெண் மருத்துவரின் பெற்றோரும் கலந்துகொண்டனர். தங்கள் மகளுக்கு நீதி கேட்டு போராடும் ஜூனியர் டாக்டர்களுக்கு ஆதரவாக இந்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்தனர். அங்கு நடைபெற்ற கண்டன கூட்டத்தல் பேசிய உயிரிழந்த மாணவியின் பெற்றோர், மாநில அரசு மற்றும் காவல்துறை மீது சரமாரியாக குற்றம் சாட்டினர்.
இந்த பிரச்சினையில் ஆரம்பத்திலிருந்தே வழக்கை மூடிமறைக்க காவல்துறையினர் முயன்றனர் என்று கூறியதுடன் முதலில், எங்களை உடலைப் பார்க்க அனுமதிக்கவில்லை என்று குற்றம் சாட்டியவர்கள், தங்களது மகளின் உடலை பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லும் போது காவல் நிலையத்தில் காத்திருக்க வேண்டியிருந்தது,” என்று அந்த பெண்ணின் தந்தை கூறினார்.
“பின்னர், உடலை எங்களிடம் ஒப்படைத்தபோதும் உடனே உடலை எரிக்க வலியுறுத்தப்பட்டதாகவும், , ஏற்கனவே மயானத்தில் வெறொருவரின் உடல் எரிக்க தயாராக இருந்த நிலையில், தங்களது மகளின் உடலை உடனே எரிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியதுடன், எங்களது மகளின் உடல் வீட்டில் வைக்கப்பட்டிருபோது, ஒரு மூத்த போலீஸ் அதிகாரி எங்களுக்கு பணம் கொடுத்தார், நாங்கள் உடனடியாக மறுத்துவிட்டோம்,” என்று கூறியதுடன்இ, பிரேத பரிசோதனை முடிந்து தங்கள் மகளின் உடலை உடனடியாக தகனம் செய்வதில் மேற்கு வங்க காவல்துறையினர் மும்முரமாக இருந்ததாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய கொலை செய்யப்பட்ட மருத்துவரின் உறவினர் ஒருவர் பேசும்போது, “இறுதிச் சடங்கு முடியும் வரை 300 முதல் 400 போலீசார் எங்களை சுற்றியும் இருந்தனர். அதன்பின்னர், ஒருவர்கூட எங்களுடன் இல்லை. நாங்கள் எப்படி வீட்டுக்கு போவோம் என்று அவர்கள் சிந்திக்கவில்லை. இறுதிச் சடங்கு வரை சுறுசுறுப்பாக செயல்பட்ட காவலர்கள், அதன்பிறகு செயலிழந்துவிட்டனர்.
மகளின் சடலத்தை வீட்டின் நடுவே வைத்து பெற்றோர்கள் அழுது கொண்டிருக்கும் போது, போலீஸ் அதிகாரி ஒருவர் பணம் தருவது குறித்து பேரம் பேசினார். இதுதான் போலீஸின் மனிதாபிமானமா?
எங்கள் தரப்பில் எல்லா கடமைகளையும் செய்துவிட்டோம் எனக் கூறும் காவல்துறையினரின் கடமை இதுதானா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கிடையில், கொல்கத்தா சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தீப் கோஷுக்கு 8 நாள்கள் சிபிஐ காவல் மருத்துவமனை முதல்வர் கைது மாணவியின் கொலை வழக்கில் தொடர்ந்து விசாரணைக்கு உள்படுத்தப்பட்டு வந்த கல்லூரியின் முதல்வர் சந்தீப் கோஷை, நிதி முறைகேடு தொடர்பான வழக்கில் சிபிஐ கைது செய்துள்ளனர். மேலும், மருத்துவமனையில் முறைகேடாக மருந்துகளை ஏற்றுமதி செய்து, தரம் குறைவான மருந்துகளை நோயாளிகளுக்கு அளித்ததாகவும், அதனை கண்டுபிடித்ததால்தான் மாணவி கொலை செய்யப்பட்டதாகவும் பாஜக தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருந்தது.
கொல்கத்தா காவல்துறை முக்கியமான வழக்கைக் கையாண்டதற்காக எதிர்க்கட்சிகள் மற்றும் மக்களிடம் இருந்து மம்தா பானர்ஜியும், அவரது அரசும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
இந்த சலசப்புக்கு மத்தியில், அம்மாநில மக்களை ஏமாற்றும் வகையில், கற்பழிப்பு குற்றவாளிகளின் செயல்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் மரணத்திற்கு காரணமாகிவிட்டாலோ அல்லது அவளை தாவர நிலையில் விட்டுவிட்டாலோ அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கக் கோரும் கற்பழிப்பு எதிர்ப்பு மசோதாவை மேற்கு வங்க சட்டசபை இந்த வாரம் நிறைவேற்றி உள்ளது.
இந்த மசோதாபடி தீர்ப்பு வழங்கப்பட்டால் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களே முதலில் மரண தண்டனைக்கு உள்ளாப்பட நேரிடும், சந்தேகாலி சம்பவம் உள்பட பல சம்பவங்களில் திரிணாமுல் காங்கிரசார்மீதுதான் பாலியல் குற்றங்கள் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.