சென்னை:

சென்னையில் நேற்று நடைபெற்ற சிஏஏக்கு எதிராக இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. காவல்துறையினர் மீது கல்வீச்சு நடைபெற்றதைத் தொடர்ந்து, தடியடி நடத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும், நேற்று  இரவு முதல் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், காவல்துறையினரின்  தாக்குதலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

திமுக எம்.பி. தயாநிதி மாறன்:

போலீசாரின் மூர்க்கத்தனமான தாக்குதலை காணும் போது ஜனநாயக நாட்டில் தான் வாழ்கிறோமா என்கிற ஐயம் எழுகிறது. பாதுகாப்பு அளிக்க வேண்டிய அரசு, பெண்கள், குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது. இது கண்டிக்க்ததக்கது என்று தெரிவித்து உள்ளார்.

கம்யூனிஸ்டு தலைவர் தா.பாண்டியன்

ஒன்றுபட்ட நாடாக இந்தியா இருக்க வேண்டும். பல நூறாண்டுகளுக்கு முன்பு நடந்த தவறுகளை இப்போது சொல்லிக்கட்டி சட்டையிடக் கூடாது. போராடியவர்கள் மீதான காவல்துறையின் கொடூர தாக்குதல் கண்டிக்கத்தக்கது.

நாம் தமிழர் கட்சி சீமான்

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக அறவழியில் போராடியவர்கள் மீது காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் தொடுத்திருப்பது அரசப்பயங்கரவாதம் என குறிப்பிட்டு உள்ளார்.

எஸ்டிபிஐ கட்சி

உரிமையைக் காக்கும் ஜனநாயக ரீதியிலான போராட்டங்களைச் சீர்குலைப்பதை தமிழக அரசும், காவல்துறையும் உடனடியாக நிறுத்த வேண்டும். தவறிழைத்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நியாமான போராட்டத்துக்கு அனுமதி வழங்குவதோடு, கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். மக்களின் நியாயமான கோரிக்கைகளை செவிமடுத்து நிறைவேற்ற வேண்டும்” என நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.