ககாரியா:
மோடியின் படத்தினை மார்பிங் செய்து வாட்ஸ்அப் குழுவில் பரவ விட்ட காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பீகார் ககாரியா நகரில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது இஸ்லாம். சில நாட்களுக்கு முன் ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் வர்த்தகர் பிரிவினர் இயக்கி வரும் வாட்ஸ்அப் குழுவில் செய்தி ஒன்று பகிரப்பட்டது.
அதில் பிரதமர் மோடி, மும்பை தீவிரவாத தாக்குதலில் முக்கிய புள்ளியான ஹபீஸ் சயீத்துடன் கைகுலுக்குவது போன்று புகைப்படம் வெளியாகி இருந்தது. அதில் துரோகியை கவனியுங்கள் என தலைப்பும் இடம் பெற்றிருந்தது.
இது குறித்து விசாரணை நடத்தி, படத்தை மார்பிங் செய்து வெளியிட்ட இன்ஸ்பெக்டர் இஸ்லாமை பணியிடை நீக்கம் செய்து டி.ஐ.ஜி. வைபவ் உத்தரவிட்டார். இந்த செய்தியை நான் அனுப்பவில்லை. எனக்கு தெரியாமல் எனது பேரன் இதனை அனுப்பி உள்ளான் என இஸ்லாம் கூறியுள்ளார்.