சென்னை
முதல்வர் மு க ஸ்டாலின் கலந்துக் கொண்ட விழாவுக்கு வந்தவர்களின் கருப்பு நிற துப்பட்டாவை அகற்றியது குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
நேற்று சென்னை எழும்பூரில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகளின் கருப்பு துப்பட்டாவை காவல்துறையினர் அகற்றியற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்தார்.
கருப்பு துப்பட்டா அகற்றப்பட்ட விவகாரத்திற்கு காவல்துறை
” விழா அரங்கிற்குள், அனுமதிக்கப்பட்ட நபர்களை தணிக்கை செய்த காவல்துறையினர் கருப்பு துப்பட்டா அணிந்து வந்தோரிடம், துப்பட்டாவை வாங்கி வைத்தனர்
பணியில் இருந்த காவலர்கள் தேவைக்கு அதிகமான எச்சரிக்கையுடன் செயல்பட்டதே காரணம். இனியும் இதுபோன்று நிகழாமல் இருக்க சென்னை காவல் பிரிவிற்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. “
என விளக்கம் அளித்துள்ளது.