நியூஸ்பாண்ட் அனுப்பிய வாட்ஸ்அப்:
வேந்தர் மூவிஸ் மதனை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வரும் நிலையில், அவர் பக்க நியாயத்தைச் சொல்லும் வீடியோ ஆதாரத்தை காவல் துறையில் உள்ள சிலர், அழித்துவிட்டதாக அதிர்ச்சி தகவல் உலவுகிறது.
எஸ்.ஆர்.எம். கல்வி குழுமத்துக்கு உட்பட்ட மருத்துவக்கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாகச் சொல்லி வேந்தர் மூவிஸ் மதன்,  பணம் வாங்கி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.
s-img-2016-06-08-1465386700-madhan-vendhar-movies-1-600
புகாருக்கு முன்பே மதன், தலைமறைவானார். ஆறு  மாதங்களுக்குப் பிறகு மதனை, காவல்துறை திருப்பூரில் கடந்த 21-ம் தேதி கைது செய்தது.
தற்போது அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  விசாரணையில் மதன், பரபரப்பான தகவலை போலீஸாரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. .
இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் பேசப்படுவதாவது:
“திருப்பூரில் மதனை கைது செய்தவுடன், அவரிடம் விசாரிக்கவில்லை. இதனால் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகிறோம். எங்கள் விசாரணைக்கு மதன்  முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார். மாணவர் சேர்க்கைக்கு என்று சொல்லி வாங்கிய பலகோடி ரூபாய் பணம் தற்போது எங்கே இருக்கிறது என்ற விபரத்தையும் முழுமையாக தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகர் ஒருவரை வைத்து வேந்தர் மூவிஸ், படம் தயாரிக்க முடிவு செய்ததாகவும், . அதற்காக அந்த நடிகருக்கு முன்பணம் கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
ஆனால் சில காரணங்களுக்காக அந்த படம் தள்ளிப்போனது. இதனால் அந்த பணத்தை பெறுவதில் பல்வேறு பிரச்சினைகளை ஏற்பட்டன.
வசூலித்த பணத்தை இதுபோல பல இடங்களில் கொடுத்திருப்பதாக மதன் தெரிவித்துள்ளார்.  அப்படி கொடுக்கும்போது அதை ரகசியமாக வீடியோவாகவும் எடுத்ததாகவும் தெரிவித்தார்.
முன்பு கைதான மதனின் கூட்டாளி சுதீரிடம் விசாரணை நடத்தியபோதும் வசூலித்த பணம் தொடர்பாக வீடியோ இருப்பதாக கூறினார். அவரது செல்போன் மூலம் இதை வீடியோவாக பதிவு செய்திருக்கிறார்.
இந்த வீடியோ காட்சிகள் பதிவான செல்போன், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் அளிக்கப்பட்டது.
ஆனால் தற்போது அந்த வீடியோ பதிவு அழிக்கப்பட்டுள்ளதாக காவல்துறைக்குள் பதட்டமான தகவல் உலவுகிறது.
அந்த வீடியோ வெளியானால் “முக்கிய பிரமுகர்கள்” சிலருக்கு பிரச்சினை ஏற்படும் என்பதால்
“பெரும் முயற்சி” எடுத்து அதை அழித்துள்ளார்கள் என்ற தகவல் கசிகிறது.
இந்த தகவலை தெரிந்த மதன் தரப்பினர், “தகவல் அழிக்கப்பட்டசெல்போன் மெமரி கார்டை கொடுங்கள். ரெக்கவரி சாப்ட்வேர் மூலம் அந்த வீடியோவை திரும்ப எடுத்துவிடலாம்” என்று அதிகாரிகளிடம் தெரிவித்தனராம்.
ஆனால், அதற்கு சில அதிகாரிகள் மறுத்துவிட்டு, “அந்த வீடியோவில் பழைய ஆயிரம் ஐநூறு ரூபாய் நோட்டுகள் ஒரு டேபிளில் இருப்பதாக தெரிகிறது. மற்றபடி வேறு ஒன்றுமில்லை. அந்த வீடியோவை . நீதிமன்றத்தில் சமர்பிப்பிப்பதுதான் முறை” என்றார்களாம்.
இப்போது இந்த விவகாரம்தான் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாக கிசுகிசுக்கப்படுகிறது.”