வாஷிங்டன்:

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் பூட்லெக் (bootleg) என்ற அழகு சாதனப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்கிறது. இதன் பொருட்களில் விலங்கு, மனிதக்கழிவுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவற்றை பயன்படுத்தியதால் தோல் நோய் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இந்த புகாரை தொடர்ந்து போலீசார் மலிவு விலையில் விற்கப்பட்ட அந்நிறுவன மேக்அப் பொருட்களை வாங்கிச் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் முடிவில் அபாயகரமான கிருமிகள், மனிதன் மற்றும் விலங்கு கழிவுகள் பயன்படுத்தி தயாரித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 21 கடைகளில் இருந்து ரூ.4.5 கோடி மதிப்பிலான அழகு சாதன பொருட்களை போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.