திருவனந்தபுரம்:

சமூகவலைதளத்தில் பொய்ச் செய்தியை பரப்பிய ஏசியாநெட் டிவி உரிமையாளர் ராஜீவ் சந்திரசேகர்  மீது வழக்கு பதியபட்டுள்ளது.

கேரளாவில் இறந்த ஆர்.எஸ்.எஸ். காரர் உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்சை மார்க்சிஸ்ட் கட்சியினர் ள் தாக்கியதாகவும், ஆர்.எஸ்.எஸ். நபர்  இறந்ததைக் கொண்டாடியாதகாவும் பொய்யான தகவலை போலிப் படங்களுடன்  @savarkar5200 என்ற ஒரு பேக் அய்டி ஜெயகிருஷ்ணன் என்ற பெயரில் வெளியானது.

அதைத் தன் பக்கத்தில் வெளியிட்டார் ஏசியா நெட் நியூஸ் தொலைக்காட்சியின் உரிமையாளரும் எம்பியுமான ராஜீவ் சந்திரசேகர்.  ஊடக அதிபர் என்பதால் அந்த பொய்ச் செய்தியை நம்பிய பலரும் அதை பகிர்ந்தார்கள்.

ஆனால் குறிப்பிட்ட ஆம்புலன்சை உடைத்தது ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள்தானே தவிர, மார்க்சிஸ்ட் கட்சியினர் அல்ல என்பது வீடியோ ஆதாரமாக வெளியானது.  இதையடுத்து அந்த பொய்ச் செய்தியை ராஜீவ் சந்திரசேகர் நீக்கினார்.

இந்த நிலையில்,போலிச் செய்தியைப் பரப்பிய ராஜீவ் சந்திரசேகர் மீது வழக்கு போடப்பட்டிருக்கிறது.  அர்னாப் கோஸ்வாமி நடத்தும் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் மிக முக்கிய உரிமையாளர்களில் ஒருவர் ராஜீவ் சந்திரசேகர் என்பது குறிப்பிடத்தக்கது.