சென்னை:

மிழகத்தில் நடைபெறும்  முறையற்ற போராட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு தடை விதிக்க காவல்துறை ஆணையருக்கு அதிகாரம் உள்ளது என்று சென்னை உயர்நீதி மன்றம் உறுதி செய்துள்ளது.

மக்கள் நலப்பிரச்சினை எனக்கூறி அரசியல் கட்சிகள் அவ்வப்போது போராட்டங்களை அறிவித்து மக்களை நெருக்கடிக்கு ஆளாக்கி வருகின்றனர். இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் மட்டுமின்றி, பொதுமக்களும் இன்னல்களை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

சென்னை மாநகர காவல்ஆணையர் அலுவலகம்

இதை கருத்தில்கொண்டு, சென்னை உள்பட மாநகரங்களில் அனுமதியின்றி போராட்டங்கள் நடத்தக்கூடாது என்று தடை விதிக்கப்படுவதாகவும்,, அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் போராட்ட மோ, மனித சங்கிலியோ  நடத்த வேண்டுமென்றால் 5 நாட்களுக்கு முன்னரே அனுமதி பெற வேண்டும் என்று   மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கு   உயர்நீதிமன்ற நீதிபதி ராஜமாணிக்கம் முன் விசாரணை நடைபெற்றது.

அதையடுத்து,  சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய கட்டாயம் காவல்துறைக்கு உள்ளதால், அதனை கருத்தில் கொண்டு, போராட்டங்களுக்கு தடை விதித்து  உத்தரவு பிறப்பிக்க காவல் ஆணையருக்கு அதிகாரம் உள்ளது என்று  கூறினார். தொடர்ந்து வழக்கின் விசாரணை வரும் வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.