
Pic Courtesy : Malai Murasu
நடிகை சனம் ஷெட்டி தனது வாட்ஸ்-ஆப் மற்றும் இன்ஸ்டாகிராமுக்கு மர்ம நபர் ஒருவரிடமிருந்து ஆபாசக் குறுஞ்செய்திகள் மற்றும் புகைப்படங்கள் வருவதாக அடையாறு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்திருந்தார்.
ஆபாசக் குறுஞ்செய்திகள் வந்த வாட்ஸ்-ஆப் எண்ணையும், இன்ஸ்டாகிராம் பக்கத்தையும், இதர ஆதாரங்களையும் காவல்துறையினரிடம் வழங்கினார்.
இதனையடுத்து இது தொடர்பாக அடையாறு சைபர் கிரைம் போலீசார் அந்த வாட்ஸ்-ஆப் எண் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தை வைத்து விசாரணையைத் துவங்கினர்.
இந்நிலையில் இந்தச் செயலில் ஈடுபட்டது ராய் ஜான் பால் எனக் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அந்த விசாரணையில் 21 வயதான ராய் ஜான் பால் திருச்சியைச் சேர்ந்தவர் என்பதும் அவர் ஒரு கல்லூரி மாணவர் என்பதும் தெரியவந்தது. அவரைக் கைது செய்த சைபர் பிரிவு போலீஸார் விசாரணைக்குப் பிறகு திருவான்மியூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தற்போது திருவான்மியூர் போலீஸார் ராய் ஜான் பாலிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.