லண்டன்: உலகக்கோப்பை தொடரின் லீக் ஆட்டங்கள் நடந்துவரும் நிலையில், ஒவ்வொரு அணியும் தற்போதைய நிலையில் பெற்றுள்ள புள்ளிகளின் விபரங்களைக் காணலாம்.
ஜுன் 16ம் தேதியுடன் முடிவடைந்த ஆட்டங்களின்படி;

முதல் 4 இடங்களில் உள்ள அணிகள்

* ஆஸ்திரேலியா – 5 போட்டிகளில் விளையாடி, 4 வெற்றி மற்றும் 1 தோல்வியுடன் 8 புள்ளிகளைப் பெற்று முதலிடம் வகிக்கிறது.

* நியூசிலாந்து – 4 ஆட்டங்களில் விளையாடி, 3 வெற்றி மற்றும் 1 இலவசப் புள்ளியுடன் சேர்த்து மொத்தம் 7 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடம் வகிக்கிறது.

* இந்தியா – 4 போட்டிகளில், 3 வெற்றி மற்றும் 1 இலவசப் புள்ளியுடன் சேர்த்து மொத்தம் 7 புள்ளிகளுடன் மூன்றாமிடம் வகிக்கிறது.

* இங்கிலாந்து – 4 போட்டிகளில், 3 வெற்றி மற்றும் 1 தோல்வியுடன் சேர்த்து மொத்தம் 6 புள்ளிகளுடன் நான்காம் இடம் வகிக்கிறது.

இந்த நான்கு அணிகள் தவிர, இலங்கை அணி 4 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் அணி 3 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும், தென்னாப்பிரிக்க அணி 3 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும், வங்கதேச அணி 3 புள்ளிகளுடன் எட்டாவது இடத்திலும், பாகிஸ்தான் அணி 3 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்திலும், ஆஃப்கானிஸ்தான் அணி எந்தப் புள்ளியும் பெறாமல் கடைசி இடத்திலும் இருக்கின்றன.

இதில் ஒரு சோகமான சுவாரஸ்யம் என்னவென்றால், மொத்தம் 7 அணிகள் இலவசப் புள்ளிகளைப் பெற்றிருக்க, பாவம், ஆஃப்கானிஸ்தான் அணிக்கு அந்தக் கொடுப்பினை இன்னும் வாய்க்கவில்லை. ஒருவேளை அப்படி இலவசப் புள்ளி பெற்றாலாவது வெறுங்கையுடன் நாடு திரும்புவதை தவிர்க்கலாம். இந்த விஷயத்தில் இலங்கை அதிர்ஷ்டம் செய்த நாடு. அந்த அணிக்கு மொத்தமாக 2 இலவசப் புள்ளிகள் கிடைத்துள்ளன.

ஆஃப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள், இதுவரை ஒரு இலவசப் புள்ளியையும் பெறவில்லை.