சென்னை:
சென்னை, அரும்பாக்கத்தில் கவிஞர் கபிலனின் மகள் தூரிகை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திரைப்பட பாடலாசிரியர் மற்றும் கவிஞர் கபிலன் மகள் தூரிகை. எழுத்தாளரான தூரிகை, சில வருடங்கள் முன்புவரை முன்னணி ஆங்கில ஊடகத்தில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவந்தார். கடந்த 2020ம் ஆண்டு ”பீயிங் வுமன் (Being Women Magazine) என்னும் டிஜிட்டல் இதழை தொடங்கி, பெண்களுக்கான பத்திரிகையாக நடத்திவந்தார். இதனிடையே, இன்று சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் தூரிகையின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக அவரது உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். தற்போது உடல் சாலிகிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தூரிகை எழுத்தாளராக மட்டுமல்ல, ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றி வந்தார். அவரின் தற்கொலை சினிமா மற்றும் எழுத்தாளர்கள் உலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை 9.30 மணி அளவில் கபிலனின் வீட்டிற்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.