நீலகிரி மாவட்டம் கூடலூர் வனச்சரகத்துக்கு உள்பட்ட தனியார் தேயிலை தோட்டத்தில் 5 வயதான ஆண் சிறுத்தை காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்துள்ளது.
அந்த பகுதியில் ரோந்து சென்ற வன ஊழியர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
சிறுத்தையின் தலை, மார்பு ,வயிற்று பகுதியில் காயங்கள் இருந்ததால் வேறு ஏதாவது விலங்குடன் சண்டை போட்டபோது , அது இறந்திருக்கலாம் என வன அதிகாரிகள் நினைத்தனர்.
ஆனால் தொடையில் காயம் இருந்ததால் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
சிறுத்தையின் உடல் பரிசோதனையில், அதன் பின்னங்காலில் காயம் பட்ட இடத்தில் துப்பாக்கி குண்டு இருந்தது தெரிய வந்தது.
சிறுத்தையை வேட்டைக்காரர்கள் சுட்டுக்கொன்றிருக்கலாம் என வன அலுவலர்கள் தெரிவித்தனர்.
புலியின் நகம் மற்றும் பற்கள், சிறுத்தையின் உடலில் இருந்து, வேட்டைக்காரர்களால் அகற்றப்படாமல் அப்படியே இருந்தது.
அங்குள்ள வனப்பகுதியில் சிறுத்தையின் உடல் நேற்று எரிக்கப்பட்டது.
இது குறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வேட்டைக்காரர்களால், சிறுத்தை சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் ஊட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-பா.பாரதி.