லண்டன்: பஞ்சாப் நேஷனல் வங்கி மோடி தொடர்பாக லண்டனில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள குஜராத்தைச்சேர்ந்த பிரபல வைர வியாபாரி ஜாமின் மனுவை இங்கிலாந்து நீதிமன்றம் மீண்டும் நிராகரித்துள்ளது.
பஞ்சாப் வங்கி மோசடி வழக்கில் தப்பியோடி இங்கிலாந்தில் தலைமறைவாக வாழ்ந்து வந்த வைர வியாபாரியான நீரவ் மோடி கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அவர் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், ஜாமின் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 6முறை அவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது 7வது முறையாக நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை இங்கிலாந்து வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றம் நீதிமன்றம் மீண்டும் நிராகரித்துள்ளது.
பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கியில் போலி ஆவணம் கொடுத்து, தான் மற்றும் தனது உறவினர் மெஹுல் சோக்சியுடன் இணைந்து 13,000 கோடி அளவிற்கு ணமோசடி செய்த குற்றச்சாட்டில், தப்பி ஓடி தலைமறைவான நிரவமோடி (வயது 49 ) இங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை, இந்தியாவிற்கு விசாரணைக்காக அழைத்து வருவதற்கான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது அவர் இப்போது லண்டன் சிறையில் உள்ளார்.
கைது செய்யப்பட்ட நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், நீரவ் மோடி வழக்கு இந்தியாவில் (India) அரசியல் ஆக்கப்பட்டுள்ளதால், இந்தியாவில் நியாயமான வழக்கு விசாரணை ஏற்பட வாய்ப்பில்லை என்றும், இந்தியாவில் போதுமான மருத்துவ வசதிகள் இல்லாததால் அவர் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் நீரவ் மோடியின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கடந்த மாதம் இங்கிலாந்து நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதற்சுகு இந்திய தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையடுத்து, அவரது ஜாமின் மனு மீண்டும் நிராகரிக்கப்பட்டு உள்ளது.
நீரவ் மோடி இந்தியாவுக்க திருப்பி அழைத்து வருவது தொடர்பான வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை நவம்பர் 3 ம் தேதி நடைபெற உள்ளது. அந்த விசாரணையின்போது, தென்மேற்கு லண்டனில் (London) உள்ள தனது சிறையிலிருந்து வீடியோ இணைப்பு மூலம் நிரவ்மோடி ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.