
டில்லி
யூனியன் வங்கிக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி தர வேண்டிய ரூ.1000 கோடி ரூபாயை தராததால் வங்கியை கடன் செலுத்த தவறியவர் என அறிவிக்கும்படி கோரிக்கை விடப்பட உள்ளது.
வங்கிகள் தனது வாடிக்கையாளர்களுக்கு கடன் உத்திரவாதக் கடிதம் அளிக்கின்றன. அந்தக் கடிதத்தைக் கொண்டு வாடிக்கையாளர்கள் மற்ற வங்கிகளில் இருந்து கடன் பெறலாம். அந்தக் கடன் வாடிக்கையாளர்கள் பெயரில் இருக்காது. உத்திரவாதக் கடிதம் வழங்கிய வங்கியின் பெயரில் இருக்கும். கடிதம் கொடுத்த வங்கி வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தை வசூல் செய்து இந்த வங்கிகளுக்கு திருப்பி அளிக்க வேண்டும்.
அவ்வகையில் சமீபத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களான நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சிக்கு கடிதம் கொடுத்ததில் ரூ.12000 கோடிக்கு மேல் மோசடி செய்த இருவரும் தற்போது நாட்டை விட்டு ஓடி விட்டனர். இது போல பஞ்சாப் நேஷனல் வங்கி வழங்கிய கடன் உத்திரவாதக் கடித்தத்தின் மூலம் யூனியன் வங்கியில் இருந்து ரூ.1000 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இந்த ரூ.1000 கோடி பணத்தை யூனியன் வங்கிக்கு இந்த மாதம் மார்ச் 31ஆம் தேதிக்குள் அளிக்கவில்லை எனில் பஞ்சாப் நேஷனல் வங்கியை கடன் செலுத்த தவறியவர் என அறிவிக்க நேரிடும். தணிக்கையாளர்கள் விரும்பினால் இந்தப் பணத்தை வாராக்கடன் என அறிவித்து பஞ்சாப் நேஷனல் வங்கியின் சொத்துக்களை ஏலமிடவும் கோரலாம்.
இதுவரை பல வாடிக்கையாளர்களை இது போல பல வங்கிகள் அறிவித்துள்ளன. ஆனால் ஒரு அரசு வங்கி இவ்வாறு அறிவிக்கப் பட உள்ளது இதுவே முதல் முறையாகும். அரசு மற்றும் ரிசர்வ் வங்கி இதில் தலையிட்டு இந்த நடவடிக்கையை நிறுத்தவில்லை எனில் பஞ்சாப் நேஷனல் வங்கி கடனாளி என அறிவிக்கப்படலாம்.
[youtube-feed feed=1]