டில்லி:

நாட்டின் நிதி செயல்பாட்டை மோடி அரசு சீர்குலைக்கிறது என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிரவ் மோடி மேற்கொண்ட மோசடி குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி கூறுகையில், ‘‘ பிரதமர் மோடியின் நடவடிக்கை மூலம் நாட்டின் நிதி செயல்பாடு அழிக்கப்ப டுகிறது. மக்களின் பணத்தை எடுத்து வங்கிகளுக்குள் மோடி வைத்துள்ளார். தற்போது அவரது நண்பர்கள் வங்கிகளில் இருந்து திருடி செல்கின்றனர்.

பணமதிப்பிழப்பிற்கு பிறகு மிக பெரிய மோசடி தற்போது நடைபெற்றுள்ளது. 11 ஆயிரம் கோடி ரூபாய் திருடிய நிரவ் மோடி நாட்டை விட்டு வெளிநாட்டிற்கு தப்பி ஓடி விட்டார். உயர்மட்ட தலையீடு இல்லாமல் இந்த மோசடி நடக்க வாய்ப்பு இல்லை’’ என்றார்.

‘‘இதற்கு பிரதமர் மோடி பதிலளிக்காமல் மவுனமாக உள்ளார். இந்த விவகாரத்தை பாஜக திசை திருப்ப முயற்சி செய்கிறது. தேர்வு எழுதுவது குறித்து மாணவ மாணவிகளுக்கு மோடி கற்று கொடுக்கிறார். ஆனால் மோசடிக்கு யார் பொறுப்பு என்று அவரால் கூற முடியவில்லை’’ என்றார்.