இஸ்ரேலில் பிரதமர் : மேலும் நெருக்கமாகும் நட்பு

ஜெருசலேம்

ந்தியப் பிரதமரின் இஸ்ரேல் பயணத்தால் இரு நாடுகளின் நட்பு மேலும் பலப்படும் என அரசியல் பார்வையாளர்களால் கருத்து தெரிவிக்கப் பட்டுள்ளது.

இஸ்ரேல் இந்தியாவுக்கு பாதுகாப்பு, ராணுவம் போன்றவற்றில் பலமுறை உதவி செய்துள்ளது.   இந்தியப் பிரதமர் ஒருவர் இஸ்ரேல் நாட்டுக்கு செல்வது இதுவே முதல் முறையாகும்,  ஏற்கனவே அக்டோபர் 2015ல் குடியரசுத்தலைவர் இஸ்ரேலுக்கு சென்றுள்ளார்.  அவரே இஸ்ரேலுக்கு சென்ற முதல் குடியரசுத்தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் உலகப்போரின் போது யூதர்கள் பலர் அகதிகளாக இந்தியாவுக்கு வந்தனர்.  அதன் பின்னரே அவர்கள் இஸ்ரேல் நாட்டுக்குச் சென்றனர்.

கார்கில் போரின் போது இஸ்ரேல் நாடு இந்தியாவுக்கு பல உதவிகளைச் செய்தது.  இந்தியா – இஸ்ரேல் உறவு 1992 முதல் நன்கு உள்ளது.  இரு நாடுகளுக்கும் இடையில் வியாபாரத் தொடர்பும் சுமுகமாக உள்ளது.

இந்தியப் பிரதமரின் இந்த பயணத்தினால் இருநாடுகளுக்கிடையே உள்ள 25 ஆண்டு கால நட்பு மேலும் பலப்படும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்


English Summary
PM's visit to israel will strengthen the friendship of both countries