டில்லி

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பிரதமரின் விமான பயண விவரங்களை தர முடியாது என ஏர் இந்தியா நிறுவனம் மறுத்துள்ளது.

பிரதமர் மோடி அடிக்கடி விமானப் பயணங்கள் மேற்கொண்டு வருகிறார்.  அந்த சமயங்களில் அவர் ஏர் இந்தியாவின் சிறப்பு விமானத்தில் பயணம் செய்து வருகிறார்.  இதையொட்டி லோகேஷ் பாத்ரா தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்த பயணங்களுக்கு எவ்வளவு தொகை வசூலிக்கப்பட்டது என்பது குறித்து மனு ஒன்றை அளித்தார்.

அதற்கு ஏர் இந்தியா தங்களிடம் இது குறித்த விவரங்கள் உள்ளதாகவும் ஆனால் பிரதமர் அலுவலகத்தின் அனுமதி இன்றி வெளியிட முடியாது எனக் கூறி அதற்கான அனுமதி கோரி பிரதமர் அலுவலகத்துக்கு ஈ மெயில் ஒன்று அனுப்பியது.   பிரதமர் அலுவலகம் பாதுகாப்புக் காரணங்களுக்காக  இந்த விவரங்களை வெளியிட  தகவல் அறியும் சட்டம் தடை செய்துள்ளதாக பதில் அனுப்பியது.

அந்த பதிலை மேற்கோள் காட்டிய ஏர் இந்தியா நிறுவனம், ”சட்டப்படி வெளியிட தடை செய்யப்பட்ட விவரங்களில் பிரதமரின் பயண விவரங்களும் ஒன்று என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.   அதனால் இந்த விவரங்களைத் தர இயலாது” எனத் தெரிவித்துள்ளது.

[youtube-feed feed=1]