டில்லி
ஆக்ராவை சேர்ந்த ஒரு பென்ணின் மருத்துவச் செலவுக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி அளித்த பிரதமர் அலுவலகம் அதை ரூ. 30 லட்சம் என ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளது.
ஆக்ராவை சேர்ந்த 17 வயதுப் பெண் லலித குமாரி. இவர் கடந்த 19 மாதங்களாக அப்ளாஸ்டிக் ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வருகிறார். இதற்கு சிகிச்சை அளிக்க ரூ. 10 லட்சம் இவருக்கு தேவைப்பட்டுள்ளது. வறுமையில் வாடும் லலிதாவின் பெற்றோருக்கு அந்த பணத்தை ஏற்பாடு செய்வது மிகக் கடினமாக இருந்தது. இதனால் அவர்கள் பிரதமருக்கு உதவி கோரி கடிதம் எழுதினர்.
அந்த கடிதம் எழுதி இரண்டு மாதம் கழித்து பிரதமர் அலுவலகத்தில் இருந்து ரூ.3 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக உத்தரவுவந்தது. ஆயினும் மீதமுள்ள ரூ. 7 லட்சம் பணத்தை இவர்களால் ஏற்பாடு செய்ய முடியவில்லை. அதனால் உத்திரப் பிரதேச முதல்வருக்கு ரூ.7 லட்சம் நிதி உதவி கோரி லலிதாவின் பெற்றோர் மனு அளித்துள்ளனர். ஆனால் இந்த மனு முதல்வர் அலுவலகத்தில் நிராகரிப்பட்டுள்ளது
இது குறித்து முதல்வர் அலுவலகம் அளித்த விவரத்தில் லலித குமாரிக்கு ஏற்கனவே பிரதமர் அலுவலகத்தில் இருந்து ரூ.30 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டு விட்டதாகவும் அது ஊடகங்களில் வெளியாகி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இது போலித் தகவல் எனவும் தங்களுக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து ரூ.3 லட்சம் மட்டுமே உதவி அளிக்க்கப்பட்டுள்ள்தாக லலிதாவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே இந்த செய்தி சமூக ஊடகங்களிலும் பாஜகவினர் பலர் பகிர்ந்துள்ளனர் என்பதும் லலிதாவின் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது. இது குறித்து பல பத்திரிகைகள் ஆய்வு செய்துள்ளன. அந்த ஆய்வில் லலிதாவின் சிகிச்சைக்காக மருத்துவமனை ரூ. 10 லட்சம் தேவை என தெரிவித்த கடிதம் கிடைத்துள்ளது. அத்துடன் இதற்காக பிரதமர் அலுவலகத்துக்கு பெற்றோர் ரூ. 10 லட்சம் கேட்டு மனு அளித்ததற்கு பிரதமர் அலுவலகம் ரூ. 3 லட்சம் நிதி உதவி அளித்ததும் தெரிய வந்துள்ளது.
ஆனால் ஊடகங்களுக்கு செய்தி அளிக்கும் போது பிரதமர் அலுவலகம் எண்ணிக்கையில் ரூ. 3000000 எனவும் எழுத்தில் மூன்று லட்சம் எனவும் தெரிவித்துள்ளது. ஊடகங்கள் இந்த வேறுபாட்டை கவனியாமல் ரூ.30 லட்சம் நிதி உதவி என குறிப்பிட்டுள்ளன. இதை அடிப்படையாக கொண்டு பாஜகவினர் பலர் இதை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர்.
இந்நிலையில் மாநில அரசு இதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. லக்னோவில் உள்ள மருத்துவமனையில் அரசு உதவியுடன் லலித குமாரிக்கு சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ள்து.