சென்னை: அதானி முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு குறித்து விமர்சனம் செய்தால்,  சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி மிரட்டியுள்ள நிலையில்,  அமைச்சரின் வெற்று மிரட்டலுக்கு பாமக அஞ்சாது என பாமக வழக்கறிஞர் பாலு பதிலடி கொடுத்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின், குஜராத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபரான, சர்ச்சைக்குரியன  அதானியை தனது சென்னை  ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சந்தித்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து விளக்கம் அளிக்க பாமக தலைவர் ராமதாஸ்  வேண்டிய நிலையில், அதற்கு முதல்வர் தரப்பில் எந்தவொரு விளக்கமும் இதுவரை கொடுக்கப்பட வில்லை. ஆனால்,  அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் மிரட்டல் அறிக்கை வெளியிடப்பட்டது.   முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்கவும் இல்லை. அவர் நிறுவனத்துடன் திமுக ஆட்சியில் எந்த ஒப்பந்தமும் போடவில்லை.. உண்மைக்கு மாறாக அவதூறு பரப்பினால் நடவடிக்கை கூறியுள்ளார்.

அமைச்சரின் இந்த மிரட்டல் சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாக மாறி உள்ளது. இந்த நிலையில்,  அமைச்சர் செந்தில் பாலாஜியின் வெற்று மிரட்டலுக்கு பாமக அஞ்சாது. பாமக வழக்கறிஞரும்,   பாமக செய்தி தொடர்பாளர்  மற்றும்  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் இணைத் தலைவருமான  பாலு கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,  அதானி குழுமம் தமிழக மின் வாரியத்துக்கு கையூட்டு கொடுத்தது என்ற குற்றச்சாட்டுக்கு பதில் என்ன?  என்று கேள்வி எழுப்பியதுடன்,  முதல்வர்-அதானி சந்திப்பு நடக்கவில்லை என்றால் அதுகுறித்து செய்தி வெளியிட்ட ஊடகங்கள் மீது வழக்கு தொடுக்க அரசு தயாரா? என கேள்வி எழுப்பி உள்ளார்.

மின்சாரத்துறை அமைச்சரின் வெற்று மிரட்டல்களுக்கு பாமக அஞ்சாது என தெரிவித்துள்ள பாலு,  அதானி குழுமம் தமிழக மின் வாரியத்துக்கு கையூட்டு கொடுத்தது என்ற குற்றச்சாட்டுக்கு பதில் என்ன? * அதானி ஊழல் குற்றச்சாட்டுக்கு பதில் கூறாத அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கமாக பாடும் பல்லவியை மீண்டும் பாடி உள்ளார் என விமர்சித்து உள்ளதுடன்,   செந்தில் பாலாஜி மது வணிக துறையை கூடுதலாக கவனித்து வருவதால் பாமக-வின் வினா புரியாமல் இருந்திருக்கலாம்.  ஆனால்,   மீண்டும் ஒருமுறை வினாவை முன்வைக்கிறேன். அதை நன்றாக படித்து விட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளிக்க வேண்டும்.

முதல்வர்-அதானி சந்திப்பு நடக்கவில்லை என்றால் அதுகுறித்து செய்தி வெளியிட்ட ஊடகங்கள் மீது வழக்கு தொடுக்க அரசு தயாரா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

அதானி நிறுவனத்துடன் எந்த ஒப்பந்தமும் போடவில்லை.. அவதூறு பரப்பினால் நடவடிக்கை! அமைச்சர் செந்தில்பாலாஜி