புதுச்சேரி
பாட்டாளி மக்கள் கட்சி புதுச்சேரியில் தனித்து போட்டியிட போவதாக அறிவித்துள்ளது.

வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாகச் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி இரு மாநிலங்களிலும் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியும் அதிமுகவும் கூட்டணி அமைத்துள்ளன.
புதுச்சேரியிலும் கட்சிகள் தங்கள் வியூகத்தைத் தொடங்கி உள்ளன. அவ்வகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் மற்றும் அங்கீகாரம் இல்லை என பாமக கூறி உள்ளது. அதையொட்டி இன்று நடந்த அக்கட்சியின் செயற்குழுவில் தனித்துப் போட்டியிடத் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.
எனவே பாமக புதுவையில் 12 தொகுதிகளிலும் காரைக்காலில் 3 தொகுதிகளிலும் யாருடனும் கூட்டணி இன்று தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இன்று அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகி உள்ள நிலையில் பாமகவின் இந்த அறிவிப்பு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
[youtube-feed feed=1]