தைலாபுரம்; தனது வீட்டில் ரகசிய காமிரா பொருத்தி மகன் அன்புமணி கண்காணிப்பதாக ஏற்கனவே புகார் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், தனது தொலைபேசி வைபைமூலம் ஹேக் செய்யப்பட்டு உள்ளதாக, விழுப்புரம் மாவட்டம்   கோட்டக்குப்பம் டி.எஸ்.பி அலுவலகத்தில் புகார்  அளிக்கப்பட்டுள்ளது.

பாமகவில் தந்தை மகனுக்கு இடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில்,  ராமதாசுக்கு எதிராக, பாமகவினரை ஒருங்கிணைக்கும் முயற்சியிக அன்புமணி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். மேலும், ராமதாஸ் பொதுக்குழு கூட்டம் அறிவித்துள்ளதற்கு போட்டியாக அன்புமணியும் போட்டி பொதுக்குழு கூட்டம் அறிவித்துள்ளார். இவர்களின் மோதல் பாமகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்,   விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் தோட்டத்தில் உள்ள இல்லத்தில் பா.ம.க நிறுவனர் ராமதாசின் தொலைபேசி வைபை மூலம் சட்டவிரோதமாக ஹேக் செய்யப்பட்டு இருப்பதாக புகார் தெரிவித்துள்ளார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக, தனது இல்லத்தில் ஒட்டுக்கேட்பு கருவி வைத்தது அன்புமணிதான் என  நேரடியாக குற்றம் சாட்டிய பா.ம.க நிறுவனர் ராமதாஸ். மேலும், உலகத்திலேயே தந்தையை வேவு பார்த்த மகனாக இவராகவே இருக்க முடியும் என்றும் அவர் விமர்சித்து இருந்தார்.

இந்த நிலையில், பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தனது தொலைபேசி ஹேக் செய்யப்பட்டு இருப்பதாகவும், வைபை மூலம் சட்டவிரோதமாக ஹேக் செய்யப்பட்டு உள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகார் மனு கோட்டக்குப்பம் டி.எஸ்.பி அலுவலகத்தில் அளிக்கப்பட்டுள்ளது. அதில் தொலைபேசியை வைபை மூலம் சட்டவிரோதமாக ஹேக் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.