டெல்லி: பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தனி விமானம் மூலம் இன்று ரஷ்யா புறப்படுகிறார். உகரைன் போருக்கு பிறகு முதன்முறையாக பிரதமர் மோடி ரஷ்ய பயணம் மேற்கொள்கிறார்.

இந்தியா-ரஷ்யா இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில்,   அரசுமுறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று மாஸ்கோவுக்கு பயணமாகிறார்.  இதன் மூலம்,  இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் பல முக்கிய உலகப் பிரச்சினைகளில் இருவரது நிலைப்பாடு பற்றியும் விவாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

ரஷ்யாவில் அதிபர் புதிரை சந்தித்து உரையாடும் பிரதமர் மோடி,  உக்ரைன் உடனான போரை நிறுத்துவது குறித்தும் மோடி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்டு, அங்கிருந்து ஆஸ்திர்யாவிற்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றபின், மேற்கொள்ளும் இரண்டாவது வெளிநாட்டு பயணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.