டெல்லி பிரதமர் மோடி 3 நாள் பயணமாக ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ்  ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு நள்ளிரவு புறப்பட்டு சென்றார். இந்த நிலையில், இன்று காலை அவர் ஜெர்மனி சென்றடைந்தார்.  இது பிரதமர் மோடியின் 2022ம் ஆண்டின் முதல் வெளிநாட்டு பயணம்.

பிரதமர் மோடி நேற்று நள்ளிரவு  தலைநகர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஜெர்மனி நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். அதைத்தொடர்ந்து டென்மார்க், பிரான்ஸ் நாடுகளுக்க பயணமாகிறார். அவரது பயணத்திட்டத்தின்படி, சுமார் 65மணி நேரம் அவர் வெளிநாடுகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இரு நாட்டு உறவு, கல்வி, கலாச்சாரம், தொழில் வளர்ச்சி உள்பட பல்வேற நிகழ்வுகள் தொடர்பாக,  ஜெர்மனி, டென்மார்க் மற்றும் பிரான்ஸ்  நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்பு, கலந்துரையாடல், பேச்சுவார்த்தை என 25 நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

தொடர்ந்து, சர்வதேச தொழில்துறை தலைவர்கள் 50 பேருடன் கலந்துரையாட உள்ளார். வெளிநாடு வாழ் இந்தியர்களையும் அவர் சந்திக்க உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நள்ளிரவு புறப்பட்டு சென்ற பிரதமர் மோடி, மூன்று ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தின் முதல் கட்டமாக சென்றடைந்தார் இன்று காலை ஜெர்மனி சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்புடன்  ராணுவ அணிவகுப்புடன் ஜெர்மன் நாட்டு அமைச்சர் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.

பிரதமர் மோடி இன்று பெர்லினில் ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் மற்றும் 6வது இந்தியா-ஜெர்மனி இடையேயான அரசுகளுக்கு இடையேயான ஆலோசனை கூட்டத்தை சந்திக்கிறார்.