
ஜெய்ப்பூர்:
பிரதமர் மோடியின் மனைவி யசோதாபென், ராஜஸ்தானில் நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்திருக்கிறார்.
ராஜஸ்தான் மாநிலம் கோடா – சித்தூர் நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் யசோதாபென் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியது. இதில் அவருடன் வந்த ஒருவர் பலியானார்.
பலத்த காயமடைந்த காயமடைந்த யசோதாபென் சித்தூர்கர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரம் தெரிவிக்கிறது.
யசோதாபெனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாகவும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது.
பிரதமர் மனைவி விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் ஏதும் சதி இருக்குமா என்ற கோணத்திலும் காவல்துறை விசாரித்து வருகிறது.
Patrikai.com official YouTube Channel