சென்னை: பிரதமர் மோடி பங்கேற்கவிருந்த பொங்கல் நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்படுவதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்படவுள்ள மருத்துவக்கல்லூரிகளை திறந்துவைக்க பிரதமர் மோடி வரும் 12ந்தேதி தமிழகம் வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மதுரையில், பாஜக சார்பில் மதுரை விமான நிலையம் அருகே உள்ள மண்டேலா நகரில் பாஜக சார்பில் ஜனவரி 12 பொங்கல் விழா நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 1,000 பொங்கல் பானைகள் வைத்து பொங்கலிட திட்டமிட்டு உள்ளதாகவும், இந்த பொங்கல் விழாவில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், தற்போது பிரதமர் மோடி பங்கேற்க இருந்த பொங்கல் விழா ஒத்திவைக்கப்படுவதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.