டெல்லி: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா விரைந்து குணமடைய வேண்டுமென பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், ஜம்மு காஷ்மீா் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அவரது மகன் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

தங்களது குடும்பத்தினர் அனைவரும் தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளதாகவும், தந்தையுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறும் ஒமர் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.

இந் நிலையில் பரூக் அப்துல்லா விரைந்து குணமடைய வேண்டுமென பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவருடைய குடும்பத்தினர் நலனுக்காக பிரார்த்திப்பதாகவும் டுவிட்டரில் கூறியுள்ளார்.