டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி வருகிற 11 ஆம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. காந்தி கிராமம் கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணாக்கர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.
முன்னதாக பிரதமர் மோடி வருகிற 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை கலந்துகொள்வதாக செய்தி வெளியான நிலையில் அதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மறுப்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில், பிரதமர் நவம்பர் 11ஆம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல்கள் வெளியாக உள்ளது.
பிரதமர் மோடி திண்டுக்கல் காந்தி கிராமம் கிராமிய நிகர்நிலைப் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க நவ.11ம் தேதி தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.
காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் 1956-ல், ஒரு சிறிய கிராமப்புறக் கல்லூரியாக தொடங்கப்பட்டு, 1976-ல் நிகர்நிலைப் பல்கலைகழகமாக உயர்வடைந்தது. இப்பல்கலைக்கழகம் ஏறத்தாழ 200 ஏக்கர் பரப்பளவில் நிறுவப்பட்டுள்ளது. டெல்லியை சேர்ந்த பல்கலைக்கழக மானியக் குழு அதன் மூன்றாவது சட்டப் பிரிவு 1956 இன் கீழ் அதை பல்கலைக்கழகமாக மாற்றியது. இதையடுத்து, தன்னாட்சி அதிகாரம் பெற்ற ஒரு பல்கலைக்கழகமாக காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் மாறியது. இப்பல்கலைக் கழகம், பல்கலைக்கழக மானியக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.